தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search
Home > Tamils - a Trans State Nation > One Hundred Tamils of the 20th Century -  Kavi Arasu Kannadasan > Selected Lyrics > எங்கும் எதிலும் தமிழோசை


Selected Kannadasan Songs

 

எங்கும் எதிலும் தமிழோசை
sung by Sirkali Govindarajan

எங்கும் எதிலும் தமிழோசை
லண்டன் எதிரொலிக்கும் அந்த மணியோசை
பொங்கும் தமிழ்ப்பாட்டின் இன்னோசை
மனம் பூரித்துப் பாடுதம்மா என்னாசை

சங்கம் வளர்த்த தமிழ்
உலகமெங்கும் இங்கு தனிநடை போடுதம்மா
வீறுகொண்டு சங்கக்குலவிளக்கை தமிழ்த்தாயை
இந்த தலைநகர் பாடுதம்மா ஆவல் கொண்டு

முருகன் கழுத்துக்கொரு மணியாரம்
அவன் முன்னின்று பாடுதற்கு தேவாரம்
நிறுமித்த நெஞ்சினிற்குப் புகழாரம்
இந்த நேரத்தில் நான் இசைக்கும் தமிழாரம்

ஆக்கத்திரைக் கடலும் தமிழ் ஒலிக்கும்
அதில் ஆடிடும் மீன்களெல்லாம் தமிழ்ப்படிக்கும்
தீர்த்தக்கரையில் பெண்கல் குரல் ஒலிக்கும்
அது திரும்பிய பக்கமெல்லாம் எதிரொலிக்கும்
எங்கும் எதிலும் தமிழோசை

உலகம் முழுதும் சென்றார் தொழில் நடத்த
தமிழன் உள்ளமும் சென்றதம்மா தமிழ் நடத்த
கலையில் சிறந்த இசைக்கலை நடத்த
நானும் கடலைக் கடந்து வந்தேன் தமிழ் வளர்க்க

எங்கள் குலத்துதித்த சோதரரே
தினம் இன்முகம் காட்டி வரும் அன்னையரே
உம்மை நினைத்திருக்கும் தாயகமே
இந்த உலகத்திலே சிறந்த தமிழகமே தமிழகமே

அன்றொரு நாள் நம்மை அடிமைகொண்டார்
முருகன் அவரையும் சேர்த்து இன்று அடிமை கொண்டார்
இன்பத்தமிழர் தங்கள் கடமை கண்டார்
கோவில் எழுப்பிவிட்டார் தமிழை ஏற்றிவைத்தார்

மலைக்குடி வேலன் இன்று கடல் தாண்டினான்
லண்டன் மாநகரில் வந்து குடியேரினான்
சிலைவடிவாக வந்து வரம் நல்கினான்
தமிழர் திருவருள் கொள்வதற்குத் துணையாகினான்

எங்கிருந்தும் அவனை மறப்பதில்லை
தமிழர் ஏற்றும் திருவிளக்கு அணைவதில்லை
பொங்கும் தரும வெள்ளம் குறைவதில்லை
தமிழர் புகழும் பொருளும் என்றும் அழிவதில்லை

நாகரீகம் வளர்ந்த மேற்கினிலே
குமர நாயகன் கோவில் கண்டார்
ஆசையிலே தேக உழைப்பை சிலர் உவந்தளித்தார்
சிலர் திரவியம் தந்ததுடன் தம்மை தந்தார்

அறுபடை வீடு என்று அழைத்துவந்தோம்
ஒரு அற்புத வீட்டை இங்கே படைத்துவிட்டோம்
ஏழுபடைவீடு என்று தொடர்ந்து சொல்வோம்
லண்டன் எழுப்பிய கோவிலையும் சேர்த்துக்கொள்வோம்

இலங்கை முருகனுக்கோர் கதிர்காமம்
பொருள் இலங்கும் மலேசியாவில் பலகிராமம்
துலங்கிடும் லண்டனுக்கும் தொடர்ந்துவந்தார்
எங்கள் சுவாமிநாதன் அருளை சுரக்க வந்தார்

அருணகிரி ஒரு நாள் வரைந்துவைத்தார்
அவர் அடிச்சுவட்டில் பலபேர் புகழ்ந்து வைத்தார்
கருணை முருகன் தன்னை ஏற்றிவைத்தார்
கவிஞர் கண்ணதாசன் இதனை பாட்டில் வைத்தார்
உங்கள் சிர்காழி நானும் இங்கே பாடிவைத்தேன்
 

 

Mail Us up- truth is a pathless land - Home