தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Tamil National Forum > Selected Writings & Poems - Raj Swarnan > Children of Our Soil > Children of Our Soil (gif format)

மண்ணின் மைந்தர்கள்
Children of Our Soil

A poem by Raj Swarnan
4 November 1999

[You may view the poem in gif format here - file size 15600 bytes]

எங்கள் நிலைகள் காக்கப் படுவதற்காய்
எழுச்சியுடன் புறப்பட்டீர்கள்..
உங்களுக்காய்ச் சிலைகள்
ஊர் தோறும் எழுந்துள்ளன..

எங்கள் இடங்கள் கவரப் படுவதைத்
தடுக்க விளைந்தீர்கள்
உங்கள் படங்கள் சுவர்களை
அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன..

நீங்கள் வீழ்ந்ததனால்
நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..
நீங்கள் சருகாகிச் சாய்ந்ததால்
நாங்கள் இன்னும் கருகாதிருக்கிறோம்..
நீங்கள் மெழுகாகி உருகினீர்கள்
நாங்கள் ஒளியை அனுபவிக்கிறோம்..

உங்கள் உடல்கள் சாய்ந்ததால்
எங்கள் தலைகள் நிமிர்ந்தன..
இன்று..
நாங்கள் வெறும்
கவிதை பாடிக் கொண்டிருக்கிறோம்..
நீங்களோ..
காவியமாகி விட்டீர்கள்..

காலம் வரும்..
உங்கள் கனவுகள்
நனவாகும்..

நீங்கள் இட்ட பசளையால்
எங்கள் பயிர்கள் வளம் பெறும்..
விளையும் எங்கள் நிலங்களில்
உங்கள் நிழல்கள்
என்றும் பதிந்திருக்கும்..
புதைந்த உங்கள் உடற் புரதங்கள்
எங்கள் புதிய தலைமுறைக்குப்
புத்துணர்ச்சியூட்டும்..

உங்கள் நினைவுகளால்
எங்கள் விழி வழி பெருகும் நீர்
வாய்க்கால் வழியே
பெருக்கெடுத்தோடும்..
அவ் வற்றா நீர் வழியே
உங்கள் நினவுகள்
என்றும் பசுமையாய் எம்
நெஞ்சில் இடம் பெறட்டும்..

Mail Us up- truth is a pathless land - Home